இந்த பாதிப்பு வந்தால் கொரோனா வராதாம்!

நியூயார்க் (17 ஜுன் 2021): சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து “ஜர்னல் ஆப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்படும்போது, அந்தத் தொற்றை…

மேலும்...

பயாலாஜிக்கல் – இ கோவிட் தடுப்பூசி 90 சதவீத பாதுகாப்பு!

புதுடில்லி (17 ஜூன் 2021): : இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல் – இ நிறுவனத்தின் தடுப்பூசி, கோவிட்டிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என, மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்து உள்ளார். 90 சதவீத திறன் பெற்ற இந்த மருந்து தற்போது 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது என்றும் வரும் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்றும்…

மேலும்...

கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த ஒன்றிய அரசின் முரண்பட்ட தகவல்கள்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனீகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில், சீரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால்…

மேலும்...

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

தூத்துக்குடி (16 ஜூன் 2021): தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி வித்யா(25). கர்ப்பிணியான இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து ஆக்சிஜன் குறைவு காரணமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறுநீரகம், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. 3 குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இல்லை…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணம் – உறுதி செய்தது அரசு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்த ஒருவர் உயிரிழந்ததை அரசு உறுதி செய்துள்ளது. இதனை தடுப்பூசி பக்க விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்த குழு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி  கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்த 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் காரணமாக இறந்தார் என்று இதுகுறித்த அறிக்கை காட்டுகிறது. “நாங்கள் கண்ட முதல் மரணம் இதுதான், விசாரணையின் பின்னர் இறந்ததற்கான காரணம் தடுப்பூசிக்குப் பிறகு அனாபிலாக்ஸிஸ்…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டலே அதிக பாதுகாப்பு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): தொற்றில் இருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே அதிக பாதுகாப்புடன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், நடத்திய ஆய்வில், அவர்களுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டதிலேயே, நிறைய ஆன்டிபாடிகள் உடலில் உற்பத்தி செய்யப்பட்டன என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அதேசமயம் தொற்று ஏற்படாதவர்களில், ஆன்டிபாடிகள் குறைவாகவே இருந்தன. கோவிட்டால் பாதிக்கப்படுகையில், உடல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஆன்டிபாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை…

மேலும்...

மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்!

கரூர் (15 ஜூன் 2021): மின் கட்டணம் செலுத்த இனி நாட்கள் நீட்டிக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ”மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள். அவகாசம் இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. 50 சதவீதப் பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அவகாசம் தேவைப்படாது. மே 10ஆம் தேதிமுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதமின்றி கட்டணத்தைக் கட்ட இன்று கடைசி நாள்” என்றார். ஏற்கனவே…

மேலும்...

ஒரு பக்கம் மகிழ்ச்சி ஆனால் இன்னொரு பக்கம் கவலை!

புதுடெல்லி (14 ஜூன் 2021); இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள விவகாரம் மகிழ்ச்சியை தந்தாலும் தொற்று காரணமாக பலி எண்ணிக்கை கவலை அளிக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 72 நாட்களில் இல்லாத குறைந்த அளவாக புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் கொரோனா பாதிப்புக்கு…

மேலும்...

பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை (14 ஜூன் 2021): பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தபப்டும் என்று தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் சங்கிலித் தொடரை உடைக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்தளவிற்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை…

மேலும்...

கும்பமேளாவில் பொய்யாக நடந்த கொரோனா பரிசோதனை!

புதுடெல்லி (13 ஜூன் 2021): உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. ஹரித்வார், டேராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய மாவட்டங்களில் கும்பமேளா நடத்தப்பட்டது. வடஇந்தியாவில் பல லட்சம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக நாடு முழுக்க கொரோனா பரவியதாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த கும்பளேவில் கலந்து கொள்ளாத…

மேலும்...