குழப்படியான கணக்கு – மத்திய அமைச்சர்கள் மீது ப.சிதம்பரம் சாடல்!

Share this News:

சென்னை (15 மே 2020): மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனும், நிதின் கட்கரியும், முதலில், தங்கள் கணக்குகளை சரி செய்யட்டும்,’ என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம் கூறியுள்ளார். ‘

இதுகுறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது

“நிதின் கட்கரி ஒரு பேட்டியில், ‘அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, 5 லட்சம் கோடி ரூபாயை செலுத்தாமல், நிலுவை வைத்துள்ளன’ என, கூறியுள்ளார். ஆனால், நிதியமைச்சர், நிர்மலா சீதராமன், ’45 லட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய்க்கு, பிணையில்லாத கடன் வழங்கப்படும் என்று கூறுகிறார்.

முதலில் அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனும், நிதின் கட்கரியும், தங்களின் கணக்குகளை சரி செய்யட்டும். அதன் பின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், அரசின் உதவியில்லாமல், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்.”

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Share this News: