நாடாளுமன்றம், சட்டமன்றம் கூட்டியவர்கள் மீது வழக்கு போடுவீர்களா?: ஆளூர் ஷாநவாஸ் சரமாரி கேள்வி!

சென்னை (02 ஏப் 2020): கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு கூடிய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை கூட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்று ஆளுர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா அதிக அளவில் பரவி வருகின்றது. இந்தியாவில் 50 க்கும்…

மேலும்...

ஈஷா யோகா மையத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமை படுத்தப் பட்ட 150 பேர் – வெளிவராத உண்மைகள்!

கோவை (02 ஏப் 2020): கோவை ஈஷா யோகா மையத்தில் 150 பேர் தனிமை படுத்தப் பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா உண்மையில் பரவ காரணம் என்ன? என்பதை கவனத்தில் கொள்ளாத அரசும் ஊடகங்களும் தேவையில்லாத தகவல்களை பரப்பி…

மேலும்...

ஒரு சூழலிலும் இந்திய சட்டத்தை மீறவில்லை – தப்லீக் ஜமாத் பிரமுகர் விளக்கம்!

கோவை (02 ஏப் 2020): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாத் பிரமுகர் அங்கு நடந்த சூழல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலியையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா பரவ…

மேலும்...

ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு கவலை!

ஜெனீவா (02 ஏப் 2020): கொரோனா உயிரிழப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகம் முழுவதையும் விழிபிதுங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 935,840-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 194,286 மீண்டுள்ளனர். இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே…

மேலும்...

கொரோனா நிதியுதவியாக ரூ.1,125 கோடி வழங்கும் விப்ரோ, அசிம் பிரேம்ஜி!

புதுடெல்லி (02 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணிகளுக்காக விப்ரோ நிறுவனம் சார்பிலும் மற்றும் அதன் நிறுவனர் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையும் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,125 கோடி வழங்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவிலும்  இந்தியாவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களுக்குத் தீவிரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா நிதியாக…

மேலும்...

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் ஆல் பாஸ் – மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (01 ஏப் 2020): 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்சி பெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாடு முமுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும் நடைபெற வேண்டிய தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு…

மேலும்...

ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்கும் ஓட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ்!

ஈரோடு (01 ஏப் 2020): கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவற்றில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றோர் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் ஆதரவற்றோருக்கு இரண்டு வேளை இலவசமாக உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இடையான்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ்….

மேலும்...

இலவச ரேஷன் பொருட்கள் வழங்கல் :ஏப்ரல் 2 முதல் வீடுவாரியாக டோக்கன் வழங்கப்படும்!

சென்னை (01 ஏப் 2020): தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தொடங்குகிறது. தமிழக அரசு அரிவித்துள்ள இந்தத் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. நாளொன்றுக்கு சுமாா் 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வாரியாக டோக்கன் வழங்கப்படும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று…

மேலும்...

கொரோனா பரவலுக்கு முஸ்லிம்களை குற்றம் சாட்டுவதா? – ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (01 ஏப் 2020): கொரோனா பரவலுக்கு முஸ்லிம் சமுதாயம் மீது பழி போட்டதற்கு தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோய்க் கிருமி பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத் எனும் சிறுபான்மை ஆன்மிகக் குழு ஒன்றின் செயற்பாடே காரணம் என்ற அடிப்படையில் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்ற பெயர் கூட இல்லாமல் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள…

மேலும்...

ஈஷா யோகா மைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் உரிய பரிசோதனை: முதல்வர் அறிவிப்பு!

சென்னை (01 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்க கோவை ஈஷா மைய கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் உரிய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். அதனால்தான் 144 ஊரடங்கு…

மேலும்...