தமிழக எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் மரணம்!

சென்னை (23 மார்ச் 2021): அதிமுக மாநிலங்களவை எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் காலமானார். சட்டமன்றதேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது. முகமது ஜான்.2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

மேலும்...

சசிகலா மீது திடீர் பாசமழை பொழியும் ஓபிஎஸ்!

சென்னை (23 மார்ச் 2021): சசிகலா மீது திடீரென பாசமழை பொழிந்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். விருப்பமில்லையென்றபோதிலும் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாராக முன்மொழிந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பம் முதலே இருந்த வந்த நிலையில், எடப்பாடி தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துவதை ஓபிஎஸ் விரும்பவில்லை. அதன் பின்னணியிலேயே, தனக்கென விளம்பரங்களை கொடுக்கும் ஓபிஎஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் சசிகலா மீது ஆரம்பம் முதலே தனக்கு வருத்தம்…

மேலும்...

பாஜக கூட்டணியாலத்தான் தோற்கப்போறோம் – கண்ணீர் விடும் அதிமுகவினர்!

சென்னை (22 மார்ச் 2021): தமிழகத்தில் பாஜகவில் சிக்கித் தவிப்பதால்தான் தோல்வியை சந்திக்கபோவதாக அதிமுகவினர் குமுறுகின்றனர். பாஜக அரசின் இந்தி திணிப்புகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, விவசாய சட்டம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே உறுதியாக பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் தோல்வியை சந்திக்கும் என்கின்றனர் திமுகவினர். மேலும் அதிமுக கூட்டணியில் பாமக, தமாகா என பல கட்சிகள் இருந்தாலும், பாஜக மட்டும் மிரட்டி கொண்டிருக்கிறது.. பாஜக…

மேலும்...

பாஜக அண்ணாமலை, சைதை துரைசாமி வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு!

சென்னை (20 மார்ச் 2021): தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதே போல சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார் என்றும் எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே போல சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்…

மேலும்...

அவர் விவசாயி கிடையாது விஷ வாயு – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

தஞ்சாவூர் (19 மார்ஷ் 2021): முதல்வர் எடப்பாடி ஒரு போலி விவசாயி அவர் விவசாயி கிடையாது விஷ வாயு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: டெல்டா விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக கூறும் முதல்வர் பழனிசாமியின் நாக்கு அழுகிபோகும். காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து 50 ஆண்டுகள் காப்பாற்றியவர் கருணாநிதி….

மேலும்...

எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய 50 அதிமுக எம்.எல்.ஏக்கள் – சிக்கித்தவிக்கும் முதல்வர்!

சென்னை (19 மார்ச் 2021): அ.தி.மு.க.,வில், 50 எம்.எல்.ஏ.,களுக்கு, ‘சீட்’ வழங்கவில்லை. இவர்கள் அனைவரும் எடப்பாடிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சிலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். சிலர் அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக களம் காணுகின்றனர். சிலர்  தங்களது ஆதரவாளர்களுடன் கட்சிக்குள் இருந்துகொண்டே அதிமுகவை கவிழ்த்த உள் குத்து வேலைகளில் இறங்கிவிட்டனர். சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன், உடனடியாக, தினகரன் பக்கம் சாய்ந்தார். அங்கே, ‘சீட்’ வாங்கி, சாத்துாரில் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்கிறார். வீதி வீதியாக…

மேலும்...

அங்கேயும் ஐடி ரெயிடாமே என்ன திடீர்னு இப்படி?

சென்னை (18 மார்ச் 2021): தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.. கடலூரில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடலூரில் மொத்தம் 6 இடங்களில் 7 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடலூரில் அதிமுக சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடும் நிலையில், அவரின் ஆதரவாளர்களான சரவணன், மதியழகன், பாலகிருஷ்ணன், சுரேஷ், தமிழ்செல்வன் ஆகியோரது வீடுகளில்…

மேலும்...

ஓபிஎஸ்ஸை சிறை பிடித்த மக்கள் – தேனியில் பரபரப்பு!

தேனி (18 மார்ச் 2021): தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ், அங்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது பொது மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது. தேனி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான போடி தொகுதியில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓபிஎஸ் களமிறங்கியுள்ளார். அவர் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் போடியில் உள்ள குலாலர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒரு சமுதாய பிரிவினரை சந்தித்து ஆதரவு திரட்டச்…

மேலும்...

முதல்வரை எதிர்க்கும் வேட்பாளர் தேர்வில் திமுகவினர் படு அப்செட்!

சென்னை (15 மார்ச் 2021): முதல்வர் எட்டப்பாடியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தேர்வில் திமுகவினர் அப்செட்டாக உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எட்டப்பாடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சம பலமுள்ள வேட்பாளரை திமுக களமிறக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சம்பத்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பட்டதாரி இளைஞரான சம்பத்குமார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார். எனினும், தொகுதியில்…

மேலும்...

பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்தால் இதுதான் நடக்கும் – கண்ணீர் விட்ட அதிமுக எம்.எல்.ஏ!

சென்னை (13 மார்ச் 2021): பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்ததால் தான் இத்தனை பிரச்சனையும் என்று அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாகியுள்ளன. இதில் வாணியம்பாடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக…

மேலும்...