தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் – அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

கோவை (06 ஜன 2021): பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிற நிலையில், இந்த வழக்கில்…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜக தலைவர்!

ராணிபேட்டை (03 ஜன 2020): தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே தமிழத்தில் ஆட்சி செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்.முருகன், “ முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனக் கூறினார். அவரது இந்தக் கருத்திற்கு எதிர்வினை ஆற்றிய, அதிமுக தலைவர்கள் அதனை மறுத்து, முதல்வர் வேட்பாளர் என்றுமே எடப்பாடி…

மேலும்...

அதென்ன சீமான் இப்படி சொல்லிட்டார் – அப்படின்னா அதிமுகவுடைய நிலை?

சென்னை (30 டிச 2020): திமுகவுக்கு சரியான போட்டி நாம் தமிழர்தான் அதிமுகவல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைந்து…

மேலும்...

அதிமுகவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் பாஜக!

சென்னை (30 டிச 2020): தேர்தலுக்கு பிறகே முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பதாக பாஜக தெரிவித்துள்ளது அதிமுக கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய…

மேலும்...

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி இல்லையா? – பீதியை கிளப்பும் செல்லூர் ராஜூ!

மதுரை (26 டிச 2020): அகில இந்திய கட்சி என்பதால் பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் குறித்து தெரிவிக்கையில், “பாரதிய ஜனதாவை பொறுத்தவை அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான்…

மேலும்...

அதிமுகவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் போர்க்கொடி!

சென்னை (21 டிச 2020): எல் முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவை தொடர்ந்து விமர்சித்துவிட்டு பின்பு அப்படியில்லை எண்டு மழுப்புவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கிடையே கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, மிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2 ஆயிரத்தை நம்பி 5…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணிக்குள் மோதல் – தமிழக பாஜக தலைவரை நீக்க அதிமுக கோரிக்கை!

சென்னை (20 டிச 2020): எல் முருகன் சச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதால் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே நேற்று…

மேலும்...

ரஜினியுடன் கூட்டணி – ஓபிஎஸ் அதிரடி!

சென்னை (03 நவ 2020): வருங்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜனவரியில் கட்சியை துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ல் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அரசியல் வருகையை…

மேலும்...

இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க – சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை!

மதுரை (27 நவ 2020): சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் அக். 31ல் இறந்தார். இதன்பிறகு, கும்பகோணத்தில் உள்ள துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில்…

மேலும்...

சிறையிலிருந்து சசிகலா பரபரப்பு கடிதம்!

சென்னை (20 அக் 2020): சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தங்களுடைய ‘06.10.20’ தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். விவரங்களை அறிந்து கொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ‘கோவிட்’ காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையை அளிக்கிறது. கோவிட் நோய்த் தொற்று பரவலினால் தமிழகத்தில்…

மேலும்...