முதல்வரை எதிர்க்கும் வேட்பாளர் தேர்வில் திமுகவினர் படு அப்செட்!

Share this News:

சென்னை (15 மார்ச் 2021): முதல்வர் எட்டப்பாடியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தேர்வில் திமுகவினர் அப்செட்டாக உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எட்டப்பாடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சம பலமுள்ள வேட்பாளரை திமுக களமிறக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சம்பத்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பட்டதாரி இளைஞரான சம்பத்குமார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார்.

எனினும், தொகுதியில் பெரிய அளவில் மக்களிடமோ, கட்சிக்காரர்களிடமோ அறிமுகம் இல்லாதவர் என்பதோடு, எடப்பாடி பழனிசாமியின் பெரும் பண பலத்துடன் மோதக்கூடிய அளவுக்கு வசதியானவரும் இல்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள். அவரை வேட்பாளராக அறிவித்த நிமிடம் முதலே எடப்பாடி தொகுதியில் திமுகவினர் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர்.


Share this News:

Leave a Reply