170 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்!

புதுடெல்லி (12 மார்ச் 2021): பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் கட்சி தாவி கொண்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அல்லது சிட்டிங் எம்.எல்.க்களின் கட்சி தாவல் அக்கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கட்சியை விட்டு வெளியேறியவர்களின் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஆர் வெளியிட்ட தரவுகளின்படி, 2016 முதல் 2020 வரை 170 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

மேலும்...

மனித நேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம்!

சென்னை (09 மார்ச் 2021): வரும் சட்டமன்ற 2 தொகுதிகளில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ஒரு தொகுதியில் ‘கத்தரிக்கோல்’ சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும்...

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக!

சென்னை (09 மார்ச் 2021): அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்...

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

சென்னை (03 மார்ச் 2021): தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளார். மேலும் க்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது. மேலும் “கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட…

மேலும்...

பிரதமர் மீண்டும் தமிழகம் வருகை – சூடு பிடிக்கும் தமிழக அரசியல்!

சென்னை (25 பிப் 2021): தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பல புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். மாலையில் கோவை வரும் அவர், கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து…

மேலும்...

ராமதாஸ் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை – ஆனால் தேர்தல் கூட்டணி குறித்து இல்லையாம்!

சென்னை (31 ஜன 2021): வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் பாமக வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதால் அதிமுகவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி இழுபறியிலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். சுமார் 2 மணி நேரம்…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் – ஜேபி நட்டா எடப்பாடி சந்திப்பு திடீர் ரத்து!

மதுரை (30 ஜன 2021): அதிமுக பாஜக கூட்டணியில் 62 தொகுதிகளை பாஜக கேட்டு அடம்பிடிப்பதால் அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜ, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட்டு கேட்டு அடம் பிடிக்கின்றன….

மேலும்...

அதென்ன சீமான் இப்படி சொல்லிட்டார் – அப்படின்னா அதிமுகவுடைய நிலை?

சென்னை (30 டிச 2020): திமுகவுக்கு சரியான போட்டி நாம் தமிழர்தான் அதிமுகவல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைந்து…

மேலும்...

இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க – சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை!

மதுரை (27 நவ 2020): சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் அக். 31ல் இறந்தார். இதன்பிறகு, கும்பகோணத்தில் உள்ள துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில்…

மேலும்...

ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கவேண்டும் – திமுகவினர் ஆர்வம்!

சென்னை (15 அக் 2020): ரஜினி தேர்தலுக்கு முன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலையானால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி…

மேலும்...