உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

Share this News:

சென்னை (03 மார்ச் 2021): தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளார். மேலும் க்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது.

மேலும் “கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட வேண்டாம் என்று எங்கள் தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டார். 41 தொகுதிகளுக்குக் குறைந்தால் கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்றும் தெரிவித்து விட்டார்” என்று திமுகவிடமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி சமீபத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என நினைக்கிறார். ஆனால் திமுக குறைவான இடங்கள் ஒதுக்குவது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் வரும் ராகுல் திமுக தலைவர்களை சந்திப்பதும் இல்லை. இதனால் எதுவும் நடக்கலாம் என கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply