ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

ஸ்பெயின் (12 மார்ச் 2020): ஸ்பெயின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்பெயின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

புதுடெல்லி (12 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது….

மேலும்...

பிரபல நடிகர் நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

நியூயார்க் (12 மார்ச் 2020): பிரபல நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. ஒரு நாட்டையும் அந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சன் ஆகியோருக்கும் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்தபோது, உடல் சோர்வு மற்றும்…

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை!

ரியாத் (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதி அரேபிய இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் 21 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே உம்ரா, மற்றும் சுற்றுலா விசாவில்…

மேலும்...

அந்த இருமல் சத்தத்தை கொஞ்சம் நிறுத்துங்கப்பா – நீதிமன்றத்தை தெறிக்கவிட்ட வழக்கு!

சென்னை (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் வந்தது ஒருபுறம் என்றால் அதுகுறித்த விழிப்புணர்வுகளும் தெறிக்க விடுகின்றன. கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை மொபைல் போன் மூலம் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரமே பெருந்தொல்லையாக மாறிக்கொண்டிருக்கிறது. மொபைல் போனில் ஒருவரை அழைத்ததும் ஒரு பெரிய இருமலுடன் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வெகுவேகமாக கரோனா பரவலில் தற்காத்துக் கொள்வது பற்றி ஒலிக்கிறது. பெரும்பாலான மொபைல் போன் எண்களைத்…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 அக உயர்வு!

நியூயார்க் (11 மார்ச் 2020): அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் கரோனா கொரோனா வைரஸ் (கோவிட் -19)தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டியுள்ளதாக வாஷிங்டன் நல்வாழ்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளனர், இதையடுத்து அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறிப்பட்டார். அதிலிருந்து இதுவரை வாஷிங்டன்…

மேலும்...

கொரோனா வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி?

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவிய ‘கோவிட் 19’ வைரஸ் மனிதர்களிடம் இருந்தே மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு தும்மல், இருமல் பிரச்சனை இருந்துள்ளது. இது சாதாரண வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு என்று அந்த மக்கள் கருதி இருந்தனர். ஆனால் கோவிட் வைரஸ் தாக்குதல் உயிர்க்கொல்லி என்பது பின்நாளிலேயே தெரிய வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம்….

மேலும்...

அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்பு!

திருவனந்தபுரம் (11 மார்ச் 2020): அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேவேளை 5 முதல் 12 நாட்களுக்கு மேலாக அறிகுறிகள் எதுவும் நீடிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியிலிருந்து கேரளா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு…

மேலும்...

சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

லண்டன் (11 மார்ச் 2020): இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிசும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த 3 மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. சீனாவில் அதன் தாக்கம் சற்றே குறைந்து வந்தாலும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் வலுத்து வருகிறது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றையும் கொரோனா…

மேலும்...

மோடிக்கு கொரோனா ஆதரவு – எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

சென்னை (10 மார்ச் 2020): கொரோனா பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எஸ்வி சேகர் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும்…

மேலும்...