பிரபல நடிகர் நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

நியூயார்க் (12 மார்ச் 2020): பிரபல நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. ஒரு நாட்டையும் அந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சன் ஆகியோருக்கும் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்தபோது, உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் இருந்ததை அடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

டாம் ஹேங்க்ஸ் 1990 ல் ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply