கொரோனா சிகிச்சைக்காக தயாராகும் விளையாட்டு மைதானம்!

நியூயார்க் (31 மார்ச் 2020): நியூயார்க்கில் உள்ள பிரபல ஓபன் டென்னிஸ் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பிரபலமான யூ எஸ் ஓபன் டென்னிஸ் அரங்கை தற்காலிக மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ எஸ் ஓபன் எனப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 17,000 ரசிகர்கள் அமர்ந்து…

மேலும்...

ஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு!

வாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம் கண்டறியப்படும். அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும்…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு!

வாஷிங்டன் (27 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகில் அதிக அளவில் பரவி வரும் தொற்று நோயான கொரோனா வைரஸ், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை அங்கு 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 250 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த வைரஸுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை…

மேலும்...

கொரோனா பாதிப்பில் அசுர வேகத்தில் முன்னேறும் அமெரிக்கா!

நியூயார்க் (23 மார்ச் 2020): உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிக நோயாளிகளைக் கொண்ட நாடாக முன்னேறியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 32 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதித்தவர்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் ஸ்பெயினைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அமெரிக்காவும், ஈரானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெர்மனியும் முன்னிலை வகிக்கின்றன. இதற்கிடையே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு…

மேலும்...

கொரோனா வைரஸால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணம்!

வாஷிங்டன் (22 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அதி வேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

சியாட்டில் (17 மார்ச் 2020): அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முயற்சியில் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதனை முயற்சியாக ஒருவருக்குத் தடுப்பூசியாகச் செலத்தியுள்ளனர். இது இந்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வேட்டையைத் துவக்கி வைத்துள்ளது. சியாட்டில் நகரிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Kaiser Permanente Washington Research Institute) விஞ்ஞானிகள், வெகு குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசியை திங்களன்று தன்னார்வலர் ஒருவரின் கையில் கவனமாகச் செலுத்தி தங்களது முதல் கட்ட…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை – திங்கள் முதல் தொடக்கம்!

வாஷிங்டன் (16 மார்ச் 2020): கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் திங்கள் முதல் தொடங்கியது. உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு முதல் தடுப்பு ஊசி மருந்து சோதனை திங்கள்கிழமை அமெரிக்காவில் பரிசோதிக்கப்படும் என்ற தகவலை அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள்…

மேலும்...

அமெரிக்க அதிபருக்கு கொரோனா சோதனை!

வாஷிங்டன் (15 மார்ச் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும், 116 நாடுகளில், பரவி பலரை பலி வாங்கியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்திட நிதியும் ஒத்துக்கினார். இது குறித்து டிரம்ப் அளித்த…

மேலும்...

அமெரிக்காவில் அவசர நிலை அறிவிப்பு!

நியூயார்க் (14 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா அதிக அளவில் பரவி வருவதை அடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 40 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...

ஆர்.எஸ்.எஸ். பிஜேபியைச் சேர்ந்த இந்தியருக்கு அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர் கல்தா!

வாஷிங்டன் (12 மார்ச் 2020): அமெரிக்கா. ஜனாதிபதி தேர்தில் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் (Joe Biden) தமக்குத் தொடர்பாளராக நியமித்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் ஜானி என்பவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். அமித் ஜானி அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் பல காலமாக செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் அமித் ஜானியை முஸ்லிம் சமூகத் தொடர்பாளராகவும் தேர்தல் பிரச்சாரத்தின் டைரக்டராகவும் நியமித்திருந்தார். ஜோ பிடனின் ஆதரவாளர்கள்…

மேலும்...