கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை – திங்கள் முதல் தொடக்கம்!

232

வாஷிங்டன் (16 மார்ச் 2020): கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் திங்கள் முதல் தொடங்கியது.

உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு முதல் தடுப்பு ஊசி மருந்து சோதனை திங்கள்கிழமை அமெரிக்காவில் பரிசோதிக்கப்படும் என்ற தகவலை அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  செய்ய வேண்டியதை விட்டு கை தட்டுவதும் விளக்கேற்றுவதும் சரியா? - ராகுல் காந்தி விளாசல்!

இன்று சோதனையாக இந்த மருந்து பரிசோதித்தாலும், முழு நிவாரணம் அளிக்கும் மருந்தாக உருவாக இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.