ஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு!

Share this News:

வாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம் கண்டறியப்படும். அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது.

வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும் இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கவில் அதிக அளவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply