அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

Share this News:

சியாட்டில் (17 மார்ச் 2020): அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முயற்சியில் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதனை முயற்சியாக ஒருவருக்குத் தடுப்பூசியாகச் செலத்தியுள்ளனர். இது இந்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வேட்டையைத் துவக்கி வைத்துள்ளது.

சியாட்டில் நகரிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Kaiser Permanente Washington Research Institute) விஞ்ஞானிகள், வெகு குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசியை திங்களன்று தன்னார்வலர் ஒருவரின் கையில் கவனமாகச் செலுத்தி தங்களது முதல் கட்ட ஆய்வைத் தொடங்கியுள்ளனர். “நாங்கள் இப்போது கொரோனா வைரஸ் குழு. இந்த அவசர காலத்தில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்து வருகிறார்கள்” என்று கைசர் பெர்மனென்ட் ஆய்வுத் தலைவர் டாக்டர் லிசா ஜாக்சன் கூறியுள்ளார்.

இச்சோதனை முயற்சியில் பங்கு பெற அடுத்து 45 பேர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மாத இடைவெளியில் இரண்டு அளவுகளாக இந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply