மோடிக்கு கொரோனா ஆதரவு – எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

சென்னை (10 மார்ச் 2020): கொரோனா பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எஸ்வி சேகர் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும்…

மேலும்...

தமிழக அரசின் ரூ. 4,200 கோடி இமாலய ஊழல் – தொழிலாளர் சங்கம் கண்டனம்!

சென்னை (09 மார்ச் 2020): தமிழக அரசின் கிராமப்புர வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஊழலை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாய தொழிலாளர் சங்கம் வரும் 10 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்க வும், குறிப்பாக வறுமையிலிருந்து மக்களை மீட்கவும் நாட்டிலுள்ள ஏழை மற்றும் பணக்கார மக்களிடையே உள்ள இடை வெளியை குறைக்கவும் கொண்டு வரப்பட்ட சட்டம் மகாத்மா காந்தி தேசிய…

மேலும்...

யோகி ஆதித்யநாத் அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

உத்திர பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் அநாகரீகமான செயல்…

மேலும்...

மோடியின் அழைப்பை ரத்து செய்ய வேண்டும் – வங்க தேசத்தில் வலுக்கும் போராட்டம்!

டாக்கா (03 மார்ச் 2020): இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று வங்க தேச அரசை எதிர்த்து டாக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் டெல்லியில் சென்ற வாரம் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வங்க தேசத்தின் தந்தை என அழைக்கப்படும் சேக் முஜிபுர்…

மேலும்...

தமிழக போராட்டம் எதிரொலி- சட்டசபையில் தீர்மானத்திற்கு வாய்ப்பு- தமிழக அமைச்சர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியனவற்றை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. எனினும் முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் திருச்சியில்…

மேலும்...

பற்றி எரிந்த டெல்லியில் முஸ்லிம்களை பற்றிப் பிடித்த மொஹிந்தர் சிங்!

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலை சம்பவத்தில் 70 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலைக் கும்பலிடமிருந்து காப்பாற்றியுள்ளனர் இரண்டு சீக்கியர்கள். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 42 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக வடகிழக்கு டெல்லியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் கோகுல்புரி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டட்ஜி/ அங்கு வசித்து வந்த 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வன்முறையாளர்களுக்குப் பயந்து ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். இஸ்லாமியர்கள் அதிகம்…

மேலும்...

டெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம்.

மேலும்...

டெல்லி கலவரம் – தலைமை காவலர் சுடப்பட்டே இறந்துள்ளார்: உடற்கூறு ஆய்வு தகவல்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளதாக உடற்கூறு ஆய்வு சான்றளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால்…

மேலும்...

டெல்லி வன்முறை தொடர்பாக ஒருவர் கைது!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. முதலில் தலைமை காண்ஸ்டபில்…

மேலும்...

டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. முதலில் தலைமை…

மேலும்...