வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

அறந்தாங்கி (18 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்த்து அறந்தங்கி மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கியில் மாதர் சம்மேளனம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க ஒன்றிய தலைவர் பாண்டியம்மாள் சிறப்புரை ஆற்றினார். மேலும் பல நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும்...

அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக உலா வரும் போலி செய்தி!

சென்னை (18 பிப் 2020): அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக ஒரு போலி செய்தி ஒன்று உலா வருகிறது. குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயா பிளஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி போல் போட்டோ ஷாப் செய்தி ஒன்று உலா வருகிறது. “அதில் குடியுரிமை சட்டம் அனைத்து மதத்தினருக்குமானது. திமுக தவறான பிரச்சாரம் செய்கிறது” என்பதாக அந்த செய்தி உள்ளது. ஆனால் ஜெயா பிளஸ் அந்த செய்தியை மறுத்துள்ளது. மேலும் இது…

மேலும்...

சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து தீவிரமடையும் சென்னை ஷஹீன் பாக் போராட்டம் – வீடியோ!

சென்னை(18 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டசபையில் சபாநாயகர் அறிவித்ததை அடுத்து சென்னை ஷஹீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை (சென்னை ஷஹீன் பாக்) தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என மத பேதமின்றி பலரும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்…

மேலும்...

முஸ்லிம்களின் தொப்பி அணிந்து சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்ட சுவாமி அக்னிவேஷ்!

கண்ணூர் (18 பிப் 2020): கேரளாவில் சிஏஏ பேரணியில் முஸ்லிம்களின் தொப்பி அணிந்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் சுவாமி அக்னிவேஷ். மதரீதியில் பிளவை ஏற்படுத்தும் இந்தியாவின் குடியுரிமை திரருத்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக்காக மாறிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று கேரளாவின் கண்ணூரில் “அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்” என்ற பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று…

மேலும்...

இது இந்தியாவல்ல பாகிஸ்தான் – பாகிஸ்தான் நீதிமன்றம் பாய்ச்சல்

இஸ்லாமாபாத் (17 பிப் 2020): பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள நீதிமன்றம் “இது பாகிஸ்தான், இந்தியாவல்ல”என்றும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைகள் தலைவர் மன்சூர் பஸ்தீன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 23 பேர் கடந்த மாதம் இஸ்லாமாபாத் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமீன் மீதான மனு விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதார் மினல்லா பிறப்பித்த…

மேலும்...

சிஏஏவை எதிர்த்து சட்டமன்றம் முற்றுகை – தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

சென்னை (17 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் பிப்.19ஆம் தேதி…

மேலும்...

அன்று நமக்காக நின்றார்கள், இன்று அவர்களுக்காக நிற்போம்: சென்னை ஷஹீன்பாக்கில் இந்துக்கள்!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் காரர்களுக்கு உணவுகள் வழங்கி உதவி வருகின்றனர் அப்பகுதி இந்துக்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை ஷஹீன் பாக்காக மாற்றி பொதுமக்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில்…

மேலும்...

சிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு!

மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும்…

மேலும்...

ஜாமியா வளாகத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலின் பரபரப்பு வீடியோ காட்சிகள்!

புதுடெல்லி (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை குண்டர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் பயங்கரவாத குண்டர்கள் புகுந்து மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மேலும் ஜாமியா மாணவர்கள் மீது…

மேலும்...

தமிழகத்தில் சிஏஏ போராட்டத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

சென்னை (16 பிப் 2020): தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் போராட்டம்…

மேலும்...