பதுங்குக் குழியில் டொனால்ட் டரம்ப் – அமெரிக்காவில் அதிகரிக்கும் பதற்றம்!

வாஷிங்டன் (01 ஜூன் 2020): வெள்ளை மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புக்காக பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் மாளிகையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவர்களைத்…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில்…

மேலும்...

அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு!

நியூயார்க் (30 மே 2020): கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததை அடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் உயிரிழந்தாக கூறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள், வங்கிகள், உணவகங்கள், காவல்நிலையம் என பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்….

மேலும்...

திமுக கூட்டணி கட்சிகள் செய்யவுள்ள காரியம் தெரியுமா?

சென்னை (07 மே 2020): மதுக் கடைகள் திறப்பதை எதிர்த்து பொதுமக்கள்,இன்று, 7ம் தேதி கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்’ என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: “கொரோனா நோய் தொற்றில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், போலீஸ் துறையை…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

புதுடெல்லி (22 மார்ச் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியின் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் இன்று காலை 7 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் எவ்வித போக்குவரத்துமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில கட்டுப்பாடுகளுடனும்…

மேலும்...

சென்னையில் போராட்டங்கள் நடத்த போலீஸ் தடை!

சென்னை (14 மார்ச் 2020): சென்னையில் போராட்டம் நடத்த விதித்து பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் சனிக்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் இம் மாதம் 29-ஆம் தேதி வரை 15 நாள்கள் விதிக்கப்படுகிறது. அதன்படி, பொது இடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித…

மேலும்...

பட்டும் திருந்தாத யோகி ஆதித்யநாத் அரசு – உச்ச நீதிமன்றம் சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): அலகாபாத் நீதிமன்றத்தை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித…

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

கோவை (12 மார்ச் 2020): கோவை ஷஹீன்பாக் போராட்டம் 5 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் ஸ்டைலில் நாடெங்கும் பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை ஆத்துப்பாலம் இஸ்லாம் ஷாஃபி ஜமாத் மசூதி மைதானத்திலும் ஷஹீன்பாக் ஸ்டைலில் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டம் நடைபெறும் பகுதி…

மேலும்...

நேர காலம் பார்த்து நிதானமாக ஆதரவளித்த ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆதரவளித்தார். சென்னை, வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் மற்றும் மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 27 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டங்களை பெண்களே முன்னின்று நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு திருமாவளவன், கருணாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தமிழக சட்டப் பேரவையில் சிஏஏவை…

மேலும்...

முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை – அசாதுத்தீன் உவைசி சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையிலும் முஸ்லிம்களுக்கு அநீதிதான் கிடைக்கும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையை முடித்தவுடன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு அரசு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிறகு நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உவைசி “டெல்லி வன்முறையால்…

மேலும்...