வில்லன் நடிகரின் ஹீரோ சேவை – சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

கொச்சி (30 மே 2020): பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார். கேரளாவில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 167 பேர் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களை ஏர் ஆசியா தனி விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு செல்வதற்கு பேருதவி புரிந்துள்ளார் சோனு சூட். லாக்டவுன் தொடங்கிய காலங்களிலிருந்தே சோனு சூட் மும்பையிலிருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளில் ஊருக்கு…

மேலும்...

நாட்டு மக்களுக்கு மோடியின் கடிதம் சொல்வது என்ன?

புதுடெல்லி (30 மே 2020): நாடு முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.65 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இந்த நெருக்கடியான காலகட்டத்தில் யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை என கூறிவிட முடியாது. நம் நாட்டின் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு,குறு உற்பத்தியாளர்கள், கைவினைகலைஞர்கள், வணிகர்கள் என சக இந்தியர்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.“ இந்த நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல்…

மேலும்...

அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்!

வாஷிங்டன் (30 மே 2020): உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க நடைபெறும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக, ஐ.நா சபையின் கிளை அமைப்பாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் உலக சுகாதார நிறுவனம். சுமார் 194 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகத் தற்போது வரை இருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக…

மேலும்...

தஞ்சை ஆட்சியருடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

தஞ்சை (29 மே 2020): திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் உதவிய பொதுமக்கள் குறித்த விவரங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவை சந்தித்து திமுக மாவட்ட நிர்வாகிகள் அளித்தனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசே செய்துவிட்டதாகவும், தி.மு.க பொய் பிரச்சாரம் செய்வதாகவும், அ.தி.மு.க. அரசின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் திரு.ஸ்டாலினின் “ஒன்றிணைவோம் வா” உதவி கோரும் எண்ணிற்கு, வந்த அழைப்பின் படி தஞ்சை மாவட்டத்தில் உதவி கோரிய…

மேலும்...

அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஒரே வார்த்தை – தமிழகமெங்கும் பறக்கும் போஸ்டர்!

மதுரை (29 மே 2020): கொரோனா பாதித்தவர்களுக்கு என் வீட்டை விற்று செலவழிப்பேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய நிலையில் அவரது ஆதரவாளர்கள் அதை போஸ்டராக அடித்து ஒட்டி வருகின்றனர். கொரோனாவை ஒட்டி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 27ம் தேதி மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மதுரை மக்களுக்காக எனது…

மேலும்...

கொரோனா மரணங்களில் சீனாவை முந்திய இந்தியா!

புதுடெல்லி (29 மே 2020): கொரோனா மரணங்களில் இந்தியா சீனாவை முந்தியுள்ளது. மேலும் உலக அளவில் 9 ஆவது இடத்தில் உள்ளது. உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதுடன் இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கிட்டத்தட்ட 59 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் உலகெங்கிலும்…

மேலும்...

ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் திறப்பு!

ஜித்தா (29 மே 2020): ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் இயங்கும் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்திய தூதரகம் தொடர்பான பணிகள் (அவசர தேவைகள் தவிர) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரங்கு படிப்படியாக குறைக்கப்படவுள்ள நிலையில், இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான ஜித்தா ஹைல் சாலை VFS Global அலுவலகம் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் இயங்கும். மேலும்…

மேலும்...

தொடரும் அதிர்ச்சி – ரெயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் இறந்த உடல் கண்டெடுப்பு!

ஜஹான்சி (29 மே 2020): உத்திர பிரதேசத்தில் இரயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. நடந்தே பலர் அவரவர்களின் ஊர்களுக்கு சென்றதால் உணவு இல்லாமை, களைப்பு காரணமாக பலர் வழியிலேயே உயிரிழந்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. மும்பையிலிருந்து உத்திர பிரதேசத்திற்கு ரெயிலில்…

மேலும்...

உச்சத்தை தொடும் கொரோனா – தமிழகத்தில் ஒரே நாளில் 12 பேர் பலி!

சென்னை (29 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்‍கு நாள் வேகமாகப் பரவிவருவது, மக்‍களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்‍கு நேற்று, ஒரே நாளில் 827 பேருக்‍கு…

மேலும்...

கொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்!

கட்டாக் (28 மே 2020): கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி கோவிலில் வைத்து ஒருவரின் தலையை வெட்டி கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளார் கோவில் பூசாரி ஒருவர். ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலின் உள்ளே புதன்கிழமை இரவு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்றை கண்டெடுத்தனர் போலீசார். உடனே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலையானவரின் பெயர் சரோஜ் குமார் பிரதான் என்ற 52 வயது உள்ளுர் நபர் என்பது…

மேலும்...