கொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்!

ஜித்தா (28 மே 2020): கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பல்லடத்தைச் சார்ந்த தமிழர் (வயது 53), 23-5-2020 அன்று சிகிச்சை பலனின்றி சவுதி அரேபியா, ஜித்தாவில் மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியன் சோசியல் ஃபோரத்தின் ஜித்தா தமிழ் மாநில நிர்வாகிகள் ஊரடங்கின் போதும் முன்னின்று செய்தனர். இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் சட்ட ரீதியான அனைத்து ஆவணங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்பித்து குறுகிய நேரத்தில் நல்லடக்கம் செய்வதற்கான…

மேலும்...

ஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு !

லக்னோ (28 மே 2020): உத்திர பிரதேசம் மாநிலம் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை போலீசார் ஊரடங்கு காலங்களில் சத்தமின்றி கைது செய்துள்ளனர். ஏற்கனவே டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சஃபோரா சர்கர், மீரன் ஹைதர், ஷிஃபால் ரஹ்மான், ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்திலும் போலீசார் முஸ்லிம்களை…

மேலும்...

கொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (28 மே 2020): கொரோனா நோயை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் என்று அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு : “கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய – மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை….

மேலும்...

தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!

சென்னை (28 மே 2020): கொரோனாவை எதிர்த்துப் போராடும் எங்கள் உழைப்பை கொச்சைப் படுத்தாதீர்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இன்று 12246 பேருக்கு இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. 4,55,356 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் தமிழகம் சிறப்பாக…

மேலும்...

கொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (28 மே 2020): பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா அறிகுறிகளுடன் குர்கானில்…

மேலும்...

கொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி!

புதுவை (28 மே 2020): கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சரி செய்ய கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை மேலும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. புதுவை மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கொரோனா வரியை விதித்துள்ளது. புதுவையில் பெட்ரோல் மீதான வரி 5.75 சதவீதமாகவும் டீசல் வரி 3.65 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்ற நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருப்பது மக்களுக்கு பெரும் அவதியை உருவாக்கியுள்ளது.

மேலும்...

பாரத மாதாவை எழுப்பும் பிஞ்சுக் குழந்தை! – கருத்துப்படம்

பசி பட்டினி தாங்கி பல நூறு மைல்கள் தன்னைச் சுமந்து நடந்த தாய், மரணித்ததைக் கூட அறியாமல் எழுப்பிக் கொண்டிருக்கும் பிஞ்சு! அலட்சிய ஆட்சியாளர்களுக்கு இக்கார்ட்டூன் சமர்ப்பணம்!   நன்றி Artoons

மேலும்...

தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை (28 மே 2020): தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா நோய் தொற்று உறுதியானதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 508 ஆண்களும், 309 பெண்கள் என 817 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 137 பேர்…

மேலும்...

சென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்!

சென்னை (28 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என மருத்துவக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாததால், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து…

மேலும்...

புலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ!

முசாபர்பூர் (27 மே 2020): புலம் பெயர்கையில் இறந்த தாயை குழந்தை ஒன்று எழுப்பும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத்திய அரசு…

மேலும்...