ஊரடங்கு காலத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்களை கைது செய்வதா? – எதிர் கட்சிகள் கடும் கண்டனம்!

புதுடெல்லி (02 ஜுன் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்களை கைது செய்வதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா பவலாலும், ஊரடங்காலும் நாடே பெரும் சோதனை காலத்தில் உள்ளது. இந்நிலையில் அவசியமில்லாமல் சிஏஏ எதிர்ப்பு மாணவர்களை டெல்லி போலீஸ் கைது செய்து வருகிறது. இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக உலகம் இப்போது உள்ள சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை கூட்டாக கண்டிக்க…

மேலும்...

சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (02 ஜூன் 2020): சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சென்னையில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

மேலும்...

கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம் மத குருமார்கள்!

முர்ஷிதாபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் இமாம்கள் அப்பகுதியில் ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகும் மக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊர்களுக்கு திரும்பி வந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் ஊர் வரும் இளைஞர்கள் பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இப்பதாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்ட  இமாம்களுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி இமாம்கள் மீது…

மேலும்...

இறந்த தாயை எழுப்பும் குழந்தை – வைரலான குழந்தைக்கு உதவும் ஷாரூக்கான் அறக்கட்டளை!

மும்பை (01 ஜூன் 2020): பீகார் முசாபர்பூர் ரயில்வே சேஷனில் இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில் அந்த குழந்தைக்கு உதவ நடிகர் ஷாருக்கானின் ‘மீர் அறக்கட்டளை’ முன்வந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதில் மிகவும் அவதிபட்டனர். பலர் கால்நடையாக நடந்தே ஊருக்கு சென்றனர். இதில் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். அந்த வகையில் தாமதமாக அரசு அறிவித்த…

மேலும்...

பாஜக தலைவருக்கு கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பு!

ஐதராபாத் (01 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் மூத்த பாரதிய ஜனதா தலைவர் (பிஜேபி) தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டி சில அறிகுறிகளுடன் கோவிட் -19 பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வந்ததை அடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைராதாபாத் முன்னாள் எம்.எல்.ஏ ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு…

மேலும்...

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் ஆலோசனை!

சென்னை (01 ஜூன் 2020): தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து சமய தலைவர்களுடன் நாளை மறுநாள் மாலை 4.45 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை எப்போது திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

மேலும்...

இறுதிச் சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி!

சென்னை (01 ஜூன் 2020): இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், தொடர்ந்து, 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது…

மேலும்...

பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களை அணுக தமிழக அரசு முடிவு!

சென்னை (01 ஜூன் 2020): பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவார்களா? என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமாக இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஜூன், 15 முதல் 25 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் அப்போதைய…

மேலும்...

முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக மருத்துவரின் வெறுப்பூட்டும் பேச்சு -அதிர்ச்சி வீடியோ!

கான்பூர் (01 ஜூன் 2020): முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள் வைரஸ் பரப்ப…

மேலும்...

சென்னை அம்மா உணவகத்தில் இலவச உணவு நிறுத்தம்!

சென்னை (01 ஜூன் 2020): கொரோனா வைரஸ் ஊரடங்கையொட்டி, அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவை சென்னை மாநகராட்சி நிறுத்தம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழை-எளிய மக்‍கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்‍காமல் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. ஆனால், இந்த இலவச உணவுக்‍கு, 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது கட்டணம் வசூலிக்‍கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்‍கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மே 31-ம் தேதி…

மேலும்...