அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஒரே வார்த்தை – தமிழகமெங்கும் பறக்கும் போஸ்டர்!

Share this News:

மதுரை (29 மே 2020): கொரோனா பாதித்தவர்களுக்கு என் வீட்டை விற்று செலவழிப்பேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய நிலையில் அவரது ஆதரவாளர்கள் அதை போஸ்டராக அடித்து ஒட்டி வருகின்றனர்.

கொரோனாவை ஒட்டி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 27ம் தேதி மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘மதுரை மக்களுக்காக எனது வீட்டை விற்று கூட கொடுத்து கொண்டே இருப்பேன். கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருப்பேன். சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும். நான் மதுரைக்காரன்’’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சை அவரது ஆதரவாளர்கள் பெரிய போஸ்டர்களாக அடித்து, நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். மேலும் இந்த போஸ்டர் மற்றும் அவரது பேச்சு, வாட்ஸப்பிலும் பரவி வருகிறது. இது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: