இந்தியாவில் கொரோனாவின் கோர முகம் – செய்வதறியாது திணறும் மருத்துவத்துறை!

புதுடெல்லி (18 ஏப் 2021): இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,38,423 பேர் டிஸ்சார்ஜ்…

மேலும்...

இந்தியாவில் எகிறும் கொரோனா பரவல் – ஒரேநாளில் இவ்வளவா?

புதுடெல்லி (15 ஏப் 2021): இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா கைமீறிவிட்டது – தமிழக அரசு தகவல்!

சென்னை (15 ஏப் 2021): தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறிவிட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார். கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர் தான் சரியான நபர் என்பதால்,…

மேலும்...

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2021): நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து, இன்று பிற்பகல் 12 மணியளவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய…

மேலும்...

தடுப்பூசி தட்டுப்பாடு விவகாரத்தில் அதிரடியில் இறங்கிய திமுக எம்.எல்.ஏ – குவியும் பாராட்டுக்கள்!

மன்னார்குடி (14 மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு கட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வந்ததை அடுத்து தி.மு.க எம்.எல். ஏ. டி.ஆர்.பி ராஜா அதிகாரிகளிடம் தெரிவித்து 5 மணி நேரத்தில் தடுப்பூசி கொண்டு வரச் செய்து வரவேற்பை பெற்றுள்ளார். . தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை மிகக் கடுமையாக வீசி வருகிறது. இதனால் இரவு நேர லாக் டவுன், பகல்…

மேலும்...

இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி!

புதுடெல்லி (13 ஏப் 2021): இந்தியாவில் ஏற்கனவே ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்ற நிலையில், தற்போது ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெற, தடுப்பூசியை உள்நாட்டில் ஆய்வு செய்திருக்க வேண்டும். தற்போது இந்த விதியிலிருந்து வெளிநாட்டில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தடுப்பூசிகள், இந்தியாவில் அவரசகால அனுமதி வாங்க இந்தியாவில் ஆய்வு மேற்கொள்ள தேவையில்லை. தேசிய நிபுணர்…

மேலும்...

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்ட கொரோனா!

புதுடெல்லி (10 ஏப் 2021): இதுவரை இல்லாத அளவில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் . ஊரடங்கு குறித்து முடிவு செய்ய மாலை மகாராஷ்டிராவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளது . . நாட்டில் கோவிட் இரண்டாவது அலைக்கு சிகிச்சையளிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று மட்டும் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சோனியா காந்தி கோவிட்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கலில் அதிர்ச்சி!

லக்னோ (09 ஏப் 2021): உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி பெற வந்த மூன்று பெண்களுக்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதையொத்த சரோஜ், அனார்கலி மற்றும் சத்தியாவதி ஆகிய மூன்று பெண்களுக்கு கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக அம்மை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊசி பெற்றவர்களிடம் ஆதார் தகவல்கள் எதுவும் பெறாமல் தடுப்பூசி போட்டதாகவும் தடுப்பூசி பெற்ற பின்னர் சில அசவுகரியங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊசி பெற்றவர்கள் தெரிவித்ததை அடுத்து இவ்விவகாரம்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியில் விளையாடும் மத்திய அரசு – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (09 ஏப் 2021): நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை கருத்தில் கொண்டும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி கிடைக்க வகை செய்யும் வகையிலும் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. ஒருபுறம் கோவிட் வழக்குகள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதை விட்டு உடனடியாக கோவிட் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துவதோடு, அனைத்து மாநிலங்களுக்கும்…

மேலும்...
Durai Murugan

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டும் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (08 ஏப் 2021): திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இ தையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார். எனினும்…

மேலும்...