தடுப்பூசி தட்டுப்பாடு விவகாரத்தில் அதிரடியில் இறங்கிய திமுக எம்.எல்.ஏ – குவியும் பாராட்டுக்கள்!

Share this News:

மன்னார்குடி (14 மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு கட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வந்ததை அடுத்து தி.மு.க எம்.எல். ஏ. டி.ஆர்.பி ராஜா அதிகாரிகளிடம் தெரிவித்து 5 மணி நேரத்தில் தடுப்பூசி கொண்டு வரச் செய்து வரவேற்பை பெற்றுள்ளார். .

தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை மிகக் கடுமையாக வீசி வருகிறது. இதனால் இரவு நேர லாக் டவுன், பகல் நேரங்களில் சந்தைகளில் மக்கள் அதிகளவில் கூட கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகளும் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தடுப்பூசி தகவல் வெளியானதும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு 5 மணிநேரத்தில் தடுப்பூசி கொண்டு வர தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா உரிய ஏற்பாடு செய்தார். எளிய மக்களுக்காக குரல் கொடுத்த தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply