உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கலில் அதிர்ச்சி!

Share this News:

லக்னோ (09 ஏப் 2021): உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி பெற வந்த மூன்று பெண்களுக்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 வயதையொத்த சரோஜ், அனார்கலி மற்றும் சத்தியாவதி ஆகிய மூன்று பெண்களுக்கு கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக அம்மை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊசி பெற்றவர்களிடம் ஆதார் தகவல்கள் எதுவும் பெறாமல் தடுப்பூசி போட்டதாகவும் தடுப்பூசி பெற்ற பின்னர் சில அசவுகரியங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊசி பெற்றவர்கள் தெரிவித்ததை அடுத்து இவ்விவகாரம் வெளிவரத்தொடங்கியுள்ளது.

இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில்  அம்மை தடுப்பூசி போடுவதற்கு உத்தரவிட்ட மருந்தாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கோவிட் தடுப்பூசி பற்றாக்குறை என்று தகவல் பரவி வரும் நிலையில் கோவிட் தடுப்பூசிகு பதில் அம்மை தடுப்பூசி போட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply