பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

பஹ்ரைன் (25 பிப் 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதி வேகமாக பரவி வருகிறது. ‘கோவிட் – 19’ எனப் பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது. தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இரானில் 6 பேர் பலி!

தெஹ்ரான் (23 பிப் 2020): இரானில் கொவைட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442ஆக ஞாயிற்றுக்கிழமை உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 123 பேருக்கு…

மேலும்...

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

பீஜிங் (19 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின்…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பு – ஒருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொலை!

பியாங்யாங் (14 பிப் 2020): வட கொரியாவில் கொரோனா பாதிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை அதிகாரிகள் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய புதிய கொடிய வகை கொவைட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் தாக்குதல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூகானில்…

மேலும்...

கொரோனா வைரஸின் பெயர் மாற்றம் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

நியூயார்க் (13 பிப் 2020): கொரோனா வைரஸின் பெயர் இனி கோவிட் – 19 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது என தகவல்கள் வெளியாகின. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய தகவலின் படி கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

மேலும்...

கொரோனா வதந்திகளும் அச்சங்களும் – அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

கொரோனா வைரஸ் பற்றிய அச்சங்களும் வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கொரோனா வைரஸ் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசிய தகவல்களை, இங்கு கேள்வி – பதிலாகத் தருகிறார் பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. கொரோனா வைரஸ், சீனா உருவாக்கிய உயிரியல் ஆயுதமா? டாக்டர் ஃபரூக் அப்துல்லா இல்லை. சீனாவின் வூஹான் நகரத்தில் வைராலஜி ஆய்வகம் உள்ளது. இந்த வைரஸும் வூஹான் நகர உயிரினச் சந்தையிலிருந்து பரவியதாகக் கூறப்பட்டவுடன், இரண்டுக்கும் இடையே முடிச்சு போட்டுவிட்டார்கள். கொரோனாவும் சளி,…

மேலும்...

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

சிங்கப்பூர் (10 பிப் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. உலக அளவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் 40,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் அதிகபட்சமாக ஹூபி பகுதியில் மட்டும் கொரோனா வைரசிற்கு இதுவரை 871 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது….

மேலும்...

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துகொள்வது எப்படி? டாக்டர் முஹைதீன் (வீடியோ)

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோயிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளும் முறையை தமிழில் தெளிவாக விளக்குகிறார் டாக்டர் முஹைதீன் VIDEO

மேலும்...

கொரோனாவை எதிர்கொள்ள சீனாவுக்கு உதவ தயார்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (09 பிப் 2020): கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி சீன அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: , கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (09 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப் பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆரோக்கிய அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் (UAE Ministry of Health and Prevention (MoHAP)) ஏற்கனவே ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆக இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா…

மேலும்...