கொரோனா வைரஸ் பாதிப்பு – ஒருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொலை!

Share this News:

பியாங்யாங் (14 பிப் 2020): வட கொரியாவில் கொரோனா பாதிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை அதிகாரிகள் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய புதிய கொடிய வகை கொவைட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் தாக்குதல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் இதுவரை மொத்தம் 1,483-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியாவைச் சேர்ந்த ஒரு மூத்த வர்த்தக அதிகாரி ஒருவர் அண்மையில் சீனாவுக்கு சென்று வந்தார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் எந்த முன் அனுமதியின்றி பொது குளியலறைக்கு அதிகாரி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவரை கைது செய்து வடகொரிய அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பில் பணிபுரிந்து மற்றொரு அதிகாரி, அண்மையில் சீனாவுக்கு சென்று வந்ததை மறைத்துள்ளார். இதைக் கண்டறிந்த வடொரிய அதிகாரிகள், அவரை உடனடியாக பதவியிறக்கம் செய்து, தோட்ட வேலைக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.


Share this News:

Leave a Reply