கொரோனா வைரஸின் பெயர் மாற்றம் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Share this News:

நியூயார்க் (13 பிப் 2020): கொரோனா வைரஸின் பெயர் இனி கோவிட் – 19 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது என தகவல்கள் வெளியாகின. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய தகவலின் படி கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவி வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு கோவிட்-19 என பெயர் சூட்டடி உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply