கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

173

பீஜிங் (19 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

இதைப் படிச்சீங்களா?:  ஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்!

இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.