NRC-யை அமல்படுத்தும் எண்ணம் இல்லை – உள்துறை அமைச்சகம் விளக்கம்!

புதுடெல்லி (04 பிப் 2020): நாடு முழுவதும் என்.ஆர்.சியை இப்போதைக்கு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதுல் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிக்கு தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் மக்களிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

அமெரிக்காவில் அதிரடி – சியாட்டில் சிட்டி கவுன்சில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – VIDEO

சியாட்டில் (04 பிப் 2020): அமெரிக்காவின் சியாட்டில் சிட்டி கவுன்சில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை உலகின் பலம் வாய்ந்த நகரசபையில் ஒன்றாகும். இங்கு இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடைபெற்றது. மேலும் வாக்கெடுப்பின் அடைப்படையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் அதிக வாக்குகள் கிடைத்ததை அடுத்து இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் கவர்னர் மீது வழக்கு!

லக்னோ (04 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய முன்னாள் கவர்னர் அஜிஸ் குரோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங். மூத்த தலைவரும், உ.பி. உத்தர்காண்ட் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கவர்னராக இருந்தவருமான அஜிஸ் குரேஷி உ.பி. மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக மெழுகு வர்த்தி ஏந்தி…

மேலும்...

டெல்லி துப்பாக்கிச் சூடு – ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை திசை திருப்பும் பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரும் 8 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள டில்லியில் பிரதமர் மோடி (3 ம் தேதி) பிரசாரம் மேற்கொண்டார். டெல்லி கார்கர்டோமா பகுதியில் உள்ள சிபிடி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் மோடி பங்கேற்று பேசியதாவது: குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக சீலாம்பூர், ஜாமியா மற்றும் ஷாஹீன் பாக்…

மேலும்...

ரூ 15 லட்சம் தராமல் மக்களை ஏமாற்றியதாக மோடி அமித்ஷா மீது வழக்கு பதிவு!

ராஞ்சி (03 பிப் 2020): ரூ 15 லட்சம் தராமல் பொது மக்களை ஏமாற்றியதாக பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் மோடி மற்றும் மத்திய அமைச்சர்…

மேலும்...

போராட்டக் காரர்களை வில்லன்கள் என சித்தரித்த முக்தார் அப்பாஸ் நக்வி!

புதுடெல்லி (03 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்பப்வர்கள் அனைவரும் வில்லன்களாக சித்தரித்துள்ளார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 50 நாட்களுக்கும் மேலாக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஷஹீன் பாக்கில் பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்களாக மாறுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,…

மேலும்...

பாஜகவுக்கு பாகிஸ்தான் மீது வெறுப்பு இல்லை காதல் – பிரபல நடிகை விளாசல்!

இந்தூர் (03 பிப் 2020) பாஜகவுக்கு பாகிஸ்தான் மீது ஏதிர்ப்பு இல்லை காதல் என்று இந்தி நடிகை ஸ்வாரா பாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஸ்வாரா, செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய குடியுரிமை சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கும், ஊடுருவியவர்களை கைது செய்து வெளியேற்றுவதற்கும் ஏற்கனவே சட்ட நடைமுறைகள் உள்ளது. இப்போது புது குழப்பம் ஏன்? பாகிஸ்தான் பாடகர் அத்னான் சாமிக்கு குடியுரிமை வழங்கியதுடன், அதன்…

மேலும்...

குடியுரிமை சட்டம் குறித்து இந்து ராம் பரபரப்பு தகவல்!

மும்பை (03 பிப் 2020): ‘குடியுரிமை சட்டம் பாஜகவின் இந்து ராஷ்டிராவின் ஒரு பகுதியே’ என்று இந்து ராம் தெரிவித்துள்ளார். மும்பையில் ‘மும்பை கலெக்டிவ்’ என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய என்.ராம், ” நாட்டின் பொருளாதார நிலையை மக்கள் மறக்கடிப்பதற்காக சரியான நேரத்தில் குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து மக்களை திசை திருப்பியுள்ளது மத்திய அரசு. அதேவேளை பாஜகவின் இந்து ராஷ்டிராவின் ஒரு பகுதியன சிஏஏ மற்றும் தேசிய…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகும் தொண்டர்கள் – அதிர்ச்சியில் தலைமை!

போபால் (03 பிப் 2020): மத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் 700 க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து விலகல் கடிதத்தை மாநில தலைமையிடம்…

மேலும்...