பாஜகவிலிருந்து விலகும் தொண்டர்கள் – அதிர்ச்சியில் தலைமை!

Share this News:

போபால் (03 பிப் 2020): மத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் 700 க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து விலகல் கடிதத்தை மாநில தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாஜக தொண்டர்களின் இந்த அறிவிப்பால் கட்சி தலைமை நிலைகுலைந்து போயுள்ளது.


Share this News:

Leave a Reply