கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இரண்டாவது மரணம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காகத் டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி…

மேலும்...

கொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து!

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா அச்சம் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகள், மால்கள், தியேட்டர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா- தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு!

புதுடெல்லி (13 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டு குடிமகன். இந்த 81 பேருடன் தொடர்பில் இருந்தவர்களையும் மத்திய சுகாதாரத்துறை…

மேலும்...

கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் மரணம்!

பெங்களூரு (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த மொஹம்மது ஹூசைன், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது சளி மாதிரி பெங்களூருவில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா அரசும் உறுதி செய்துள்ளது….

மேலும்...

கத்தார் மற்றும் துபாயிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாசிடிவ்!

திருவனந்தபுரம் (12 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிக அளவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் கேரளத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 19…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

புதுடெல்லி (12 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது….

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை!

ரியாத் (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதி அரேபிய இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் 21 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே உம்ரா, மற்றும் சுற்றுலா விசாவில்…

மேலும்...

அந்த இருமல் சத்தத்தை கொஞ்சம் நிறுத்துங்கப்பா – நீதிமன்றத்தை தெறிக்கவிட்ட வழக்கு!

சென்னை (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் வந்தது ஒருபுறம் என்றால் அதுகுறித்த விழிப்புணர்வுகளும் தெறிக்க விடுகின்றன. கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை மொபைல் போன் மூலம் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரமே பெருந்தொல்லையாக மாறிக்கொண்டிருக்கிறது. மொபைல் போனில் ஒருவரை அழைத்ததும் ஒரு பெரிய இருமலுடன் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வெகுவேகமாக கரோனா பரவலில் தற்காத்துக் கொள்வது பற்றி ஒலிக்கிறது. பெரும்பாலான மொபைல் போன் எண்களைத்…

மேலும்...

அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்பு!

திருவனந்தபுரம் (11 மார்ச் 2020): அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேவேளை 5 முதல் 12 நாட்களுக்கு மேலாக அறிகுறிகள் எதுவும் நீடிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியிலிருந்து கேரளா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவால் 43 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (09 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனாவிற்கு 43 பேர் பாதிக்கப்படுள்ளனர். கடந்த வருடம் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 97 நாடுகளில் பரவி விட்டது. 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...