கொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து!

Share this News:

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா அச்சம் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகள், மால்கள், தியேட்டர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா- தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் நேற்று (12/03/2020) ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனா அச்சம் காரணமாக மீதமுள்ள இரு போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதேபோல ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply