சித்திக் கப்பனுக்கு தீவிரவாத தொடர்பு – உ.பி அரசு!

Share this News:

புதுடெல்லி (06 செப் 2022): சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு உத்திர பிரதேச அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மீதான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த உபி அரசு, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கும் அமைப்புகளுடன் கப்பனுக்கு தொடர்பு இருப்பதாகவும், சித்திக் கப்பன் தீவிர பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பாட்டாளர் என்றும், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கப்பனின் கணக்கில் வந்த ரூ.45,000க்கான ஆதாரம் தெளிவாக இல்லை என்றும், அதற்கு விளக்கம் அளிக்க கப்பனால் முடியவில்லை என்றும் உ.பி அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

கப்பனுக்கு ஜாமீன் கிடைத்தால் அது சாட்சிகளை அச்சுறுத்தும் என்றும் உ.பி அரசு கூறியுள்ளது.


Share this News:

Leave a Reply