சிறையில் உரிமைகள் மறுக்கப்படும் பெண்கள் – தீஸ்டா செடல்வாட் ஆதங்கம்!

Share this News:

அகமதாபாத் (06 செப் 2022): வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கும் பல பெண்கள் விடுதலைக்கு தகுதியுடையவர்களாக உள்ளனர் எனினும் அவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுகிறது என்று அகமதாபாத் சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட் தெரிவித்துள்ளார்.

2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுக்கு எதிராக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக் கூறி வழக்கில் தீஸ்தா செடல்வாட் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அவர் ஜாமினில் வெளியாகியுள்ளார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் செடல்வாட்டின் வீடியோ செய்தி ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் பேசியுள்ள செடல்வாத், செப்டம்பர் 5, 2017 அன்று, லங்கேஷ் பெங்களூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். பில்கிஸ் பானுவின் கற்பழிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 ஆண் கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இந்நிலையில் நான் சிறையில் 17 பெண் குற்றவாளிகளை சந்தித்தேன், தற்போது 11 ஆண் கைதிகளுக்கு விடுதலை கிடைத்ததை போன்று தகுதியான பெண் கைதிகளும் விடுதலைக்காக காத்திருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் நீதி தலைகீழாக உள்ளது.” என்றார்.

மேலும் அவர் தனது சிறை அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டபோது,, “சபர்மதி சிறையில் எனது அனுபவம் மிகவும் கவலைக்குரியது, நான் ஜூலை 2 முதல் செப்டம்பர் 3, 2022 வரை அங்கு இருந்தேன்.
சிறைவாசம் பெண்களுக்கு என்ன செய்கிறது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply