நவராத்திரி விழாவில் பயங்கரம் – 19 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு!

Share this News:

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமையின் ஒரு பகுதியாக 19 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளர்.

புதன்கிழமை இரவு உத்தரப்பிரதேச மஹோபா மாவட்டத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களுக்குப் பிறகு வீடு திரும்பும் வழியில் சிறுமி மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை தனது வீட்டின் பின்புறம் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply