பாஜகவில் புறக்கணிக்கப்படும் ஜோதிராதித்யா சிந்தியா!

Share this News:

புதுடெல்லி (23 அக் 2020): காங்கிஸிலிருந்து வெளியாகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா பாஜவில் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பாஜகவில் பதவிகள் கிடைக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கீழ் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது அதிர்ஷ்டம் என்று சிந்தியா தெரிவித்துள்ளார்.

“எனக்கு பாஜகவில் எந்த இடமும் தேவையில்லை, பாஜகவில் எந்த பதவியையும் நான் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார். கட்சியிடமிருந்து தனக்கு மரியாதை கிடைத்து வருவதாகவும், அதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

அதேவேளை ஜோதிராதித்யாவுக்கு பதவி வழங்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டதாகவும் ஆனால் பாஜகவில் அவருக்கு எந்த பதவியும் வழங்காததால் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply