முதல்வர் அமித் ஷா – அதிர வைத்த சிறுவன்!

ராஞ்சி (07 பிப் 2020): பள்ளிச் சிறுவன் ஒருவனிடம் மாநில முதல்வர் யார்? என்ற கேள்விக்கு அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஜார்க்கண்ட்டில் கல்வி ஜகர்நாத் மாத்தோ, ராம்கர் மாவட்டத்தில் உள்ள கோயா கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு மேற்கொள்ள சென்றார்.

அப்போது 7ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த அமைச்சர், நமது மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்று ஒரு மாணவனிடம் கேட்டார். அந்த மாணவன் அமித்ஷா என்று பதில் கூறியதும் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் சுஷில் குமார், அரசு பள்ளியின் மோசமான கல்வித்திறன் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply