பெட்ரோல் விலை ரூ 25 குறைப்பு!

புதுடெல்லி (29 டிச 2021): ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வருவதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். மேலும் இந்த விலை குறைப்பு சலுகை இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பைக் குறைக்க விலை குறைப்பை அமல்படுத்துவதாக…

மேலும்...

நீதிபதி மரணத்தில் மர்மம் – சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!

ஜார்கண்ட் (29 ஜூலை 2021): ஜார்கண்ட் நீதிபதி டெம்போ வேன் மோதி கொல்லப்பட்டது தொடர்பாக பார்கவுன்சில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை காலை நடைபயிற்சி செய்தபோது அவர் மீது வேகமாக வந்த டெம்போ வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான , சி.சி.டி.வி காட்சிகள் குறித்த விசாரணையில் இந்த சம்பவம் விபத்து அல்ல, வேண்டுமென்றே நடந்திருக்கலாம், என்பதைக் குறிக்கிறது….

மேலும்...

BREAKING: கர்நாடகாவில் நிலநடுக்கம்!

பெங்களூரு (05 ஜூன் 2020): கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை லேசான தீவிரம் கொண்ட நிலநடுக்கம் கர்நாடகாவில் ஹம்பி மற்றும் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் காலை 6:55 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற லேசான தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில், கர்நாடகாவில் உள்ள ஹம்பியும் ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை…

மேலும்...

ஜார்கண்டில் மீண்டும் கொடூரம் – கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி!

டம்கா (13 மே 2020): ஜார்கண்ட் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்க, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுபஹான் அன்சாரி,(26). அவரது நண்பர் துலால் மிர்தா(22) ஆகியோர் ஆடு திருடியதாகக் கூறி இருவரையும் கிராமத்திற்குள் இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சுபஹான் பரிதாபமாக உயிரிழந்தார்.துலால் மிர்தா சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

மேலும்...

கொரோனாவை பரப்புகிறாயா? – முஸ்லிம் கர்ப்பிணி மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல்!

ஜாம்ஷெட்பூர் (20 ஏப் 2020): ஜார்கண்ட் மாநிலத்தில் ரத்தப் போக்கு காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனை சென்ற கர்ப்பிணி பெண் மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வானா காத்தூன் என்ற 30 வயது பெண் ஒருவர் கருவுற்றிருந்த நிலையில் அவருக்கு கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜாம்ஷெட்பூர் (எம்ஜிஎம்) மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு மருத்துவம்…

மேலும்...

முதல்வர் அமித் ஷா – அதிர வைத்த சிறுவன்!

ராஞ்சி (07 பிப் 2020): பள்ளிச் சிறுவன் ஒருவனிடம் மாநில முதல்வர் யார்? என்ற கேள்விக்கு அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஜார்க்கண்ட்டில் கல்வி ஜகர்நாத் மாத்தோ, ராம்கர் மாவட்டத்தில் உள்ள கோயா கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது 7ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த அமைச்சர், நமது மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்று ஒரு மாணவனிடம் கேட்டார். அந்த மாணவன் அமித்ஷா என்று பதில் கூறியதும் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள்…

மேலும்...