முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – ஊடகங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (14 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் விவகாரத்தில் இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது.

ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டம் குறித்து மட்டுமே ஊடகங்கள் செய்தி வெளியிடுவதோடு, தப்லீக் ஜமாஅத்தினரே கொரோனாவை பரப்பியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் போலி வீடியோக்களும் உலா வருகின்றன. மேலும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் எதிரிகளாக விமர்சித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு விஷத்தை கக்கி வருகின்றன.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜமியத் உல் உலமா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (திங்கள் கிழமை) நீதிபதிகள், எஸ்.ஏ.போப்தே, நீதிபதி நாகேஸ்வர ராவ், நீதிபதி சந்தான கவுடார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் நடந்த இந்த விசாரணையின் போது, இந்த வழக்கில் இந்திய பிரஸ் கவுன்சிலையும் இணைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், “இவ்விவகாரம் குறித்து தீர விசாரிக்க வேண்டியுள்ளதால், இப்போதைக்கு ஊடகங்களுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என உத்தரவிட்டனர்.


Share this News:

Leave a Reply