பிரியா என் மகள்போல – அமைச்சர் கே.என்.நேரு!

Share this News:

சென்னை (23 ஆக 2022): சென்னை மேயர் பிரியா என் மகள் போன்றவர் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் நேரு, மேயர் பிரியாவை ஒருமையில் பேசியது சர்ச்சையானது.

`பட்டியலினப் பெண் மேயர் என்பதால் பிரியாவை திமுக அவமதிக்கிறது… இது சாதிய மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு’ என திமுக மீதும் கே.என் நேரு மீதும் சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கே.என்.நேரு, திமுகதான் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. 21 மாநகராட்சி மேயர்களில் 11 மாநகராட்சியை பெண்களுக்கு வழங்கியது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு மேயர் பிரியா பேட்டி கொடுக்க முடியாது என்றார். ‘நின்னு பேட்டி கொடும்மா’ என்றதோடு உட்கார என் நாற்காலியையும் கொடுத்துவிட்டு தள்ளி அமர்ந்துகொண்டேன். மேயரை ‘வாம்மா… போம்மா’ என்றது மகள் போன்ற அர்த்தத்தில்தான். என்னைவிட வயது குறைந்தவர். பிரியா என் பொண்ணு மாதிரி. இதில், எந்த ஆணாதிக்கத்தனமும் இல்லை. சாதி பாகுபாடும் கிடையாது. அந்த வீடியோவை கட் செய்து பரப்பிக்கொள்பவர்கள் பரப்பிக்கொள்ளட்டும். அதுபற்றியெல்லாம், யோசிக்கமாட்டேன். ஏனென்றால், பிரியா என் பொண்ணு. அதனால், எந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்.


Share this News:

Leave a Reply