டிசம்பர் 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிப்பு!

Share this News:

புதுடெல்லி (27 நவ 2020): கோவிட் சூழல் காரணமான சர்வதேச விமானங்களுக்கான தடை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சேவைகள் தொடரும் என்று டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு வெளியே சிக்கித் தவிக்கும்வர்களை திருப்பி அழைப்பதற்கான வந்தே பாரத் திட்டம் இதற்கு பொருந்தாது.

குளிர்காலத்தை அடுத்து இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர், இதனாலேயே டிசம்பர் 31 வரையிலான தடை நீடிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.


Share this News:

Leave a Reply