55 ரியால்களுக்கு விமான டிக்கெட் – சவூதி அரேபிய விமான நிறுவனம் வழங்கும் ஆஃபர்!

ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் உள்ள விமான நிறுவனங்களுக்கு இந்த சலுகை பயனுல்லதாக இருக்கும். சவுதி அரேபியாவின் சுற்றுலா மையங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் Fly Adeel சலுகைகளை வழங்குகிறது. இந்த டிக்கெட் விலையில் 7 கிலோ ஹேண்ட் பேக் அடங்கும். இருக்கைகள்…

மேலும்...

பயணிகளை பரிதவிக்கவிட்டு பறந்த விமானம்!

பெங்களூரு (10 ஜன 2023): 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு, இன்று காலை 6:30 மணி அளவில் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கோப் பர்ஸ்ட் என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பாஸ்களுடன் காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் மட்டும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்த…

மேலும்...

வானில் பறந்த விமானத்தில் பிரசவ வலி – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: ஆனால் நடந்தது என்ன?

பார்சிலோனா (08 டிச 2022): வானில் பறந்த விமானத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி என கூறியதை அடுத்து விமானம் தரையிறக்கப் பட்டது, ஆனால் அது நடிப்பு என தெரிய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் தப்பி ஓடிவிட்டனர். இதில் கர்ப்பிணி பெண் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த மற்ற பயணிகளை தேடும் பணி…

மேலும்...

மஸ்கட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தீ விபத்து!

மஸ்கட் (14 செப் 2022): மஸ்கட்டில் ஏர்ந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மஸ்கட்-கொச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் மஸ்கட் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறி புறப்படும்போது இறக்கையில் இருந்து புகை கிளம்பியது. அவசர கதவு வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும்...

மழை காரணமாக சென்னையில் 4 விமானங்கள் ரத்து

சென்னை (10 நவ 2021):சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கிளம்பும் மற்றும் சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும்...

டிசம்பர் 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிப்பு!

புதுடெல்லி (27 நவ 2020): கோவிட் சூழல் காரணமான சர்வதேச விமானங்களுக்கான தடை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சேவைகள் தொடரும் என்று டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு வெளியே சிக்கித் தவிக்கும்வர்களை திருப்பி அழைப்பதற்கான வந்தே பாரத் திட்டம் இதற்கு பொருந்தாது. குளிர்காலத்தை அடுத்து இரண்டாவது அலை…

மேலும்...

பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை

இஸ்லாமாபாத் (01 ஜூலை 2020): அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏறத்தாழ 250 விமானிகள் மோசடி செய்து தேர்வில் வெற்றி பெற்று விமானிகளாக பணி செய்வதாக தெரியவந்தது இந்த விமானிகளில் பலர் சர்வதேச விமானங்களை இயக்கி வருகின்ற அதிர்ச்சி தகவலும் வெளிப்பட்டடது. இதனையடுத்து வியட்னாம் அரசு பாகிஸ்தான் விமானிகளுக்கு தடை விதித்தது. தற்போது ஐரோப்பிய ஒன்றியமும், பாகிஸ்தான் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்க தடை விதித்துள்ளது. 1.7.2020 தொடங்கியுள்ள இந்த…

மேலும்...

விமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து!

மதுரை (27 மே 2020): இரண்டு மாதங்களுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தமிழகத்தில் பயணிகள் விமானத்தில் பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில், சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட விமானங்களில் பயணிக்க பயணிகள் வராததால் 1 விமானம் மட்டுமே இயக்கப்பட்டது. மற்ற விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன….

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!

கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும். மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க…

மேலும்...

திருச்சிக்கு வந்த பயணி விமானத்தில் நடு வானில் மரணம்!

திருச்சி (09 மார்ச் 2020): மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடு வானில் உயிரிழந்துள்ளார். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 180 பயணிகள் பயணித்தனர். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கையாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த மலேசியா கோலாலம்பூர் சுபங்ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா (வயது 65) என்ற பயணி…

மேலும்...