மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள்!

Share this News:

புதுடெல்லி (14 மே 2020): கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த, ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில், ரூபாய் 3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை; நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவச அரசி, கோதுமை அளிக்கப்படும். இதற்காக 3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள். ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா உணவு தானியங்கள் கிடைக்கும்

உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.


Share this News: