அமைச்சரை தாக்கியது கொரோனா வைரஸ்!

Share this News:

மும்பை (24 ஏப் 2020): மஹாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ஊரடங்கு காலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது குறித்து கடந்த வாரம் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத், காவல்துறை மூத்த உயரதிகாரியுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அந்த காவல் உயரதிகாரிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சருக்கு முதல்முறை நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. 2-வது முறை சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வெளியாகியுள்ளது.

இதையடுத்து தானேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply