அஸாதுத்தீன் உவைசிக்கு முஸ்லீம் லீக் ஆதரவு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகராட்சி தேர்தலில் ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐ ஆதரிப்பதாக முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் AIMIM வேட்பாளர்களை ஆதரிப்பதாக தெலுங்கானா முஸ்லீம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாஜக இங்கு கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ஹைதராபாத் மாநகராட்சியில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 2016 தேர்தலில், டிஆர்எஸ் 99 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் 44, பாஜக நான்கு மற்றும் காங்கிரஸ் இரண்டு இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply