அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (29 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

டெல்லியில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டிசம்பர் 3 ம் தேதி விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு தெரிவித்திருந்தார்.

புராடியில் உள்ள சமரவேதிக்கு போராட்ட இடத்தை மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் போராட்ட இடத்தை மாற்றப்போவது இல்லை என்றும், நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று கூறி, முப்பது விவசாயிகள் அமைப்புகள் அமித் ஷாவின் முன்மொழிவை நிராகரித்தன. இது தவிர, மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்வதே எங்கள் முதன்மை கோரிக்கை எனவும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் போராட்ட களத்தை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட புராடி மைதானத்திற்கு மாற்றக்கூடாது என்றும் முடிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரும் போராட்டத்தில் கலந்துகொள்ள மேலும் அதிகமானோர் அங்கு குவிந்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply