மேயர் பதவிக்கு உவைஸி கட்சி முயற்சி!

ஐதராபாத் (05 டிச 2020): ஹைதராபாத் நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டி.ஆர்.எஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன. AIMIM க்கு மேயர் பதவியை வழங்குவதற்கான உடன்பாட்டை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என உவைஸி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை 2016 ல் 88 இடங்களை வென்ற டிஆர்எஸ், இந்த முறை 55 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. மிகப்பெரிய ஒற்றை கட்சியாக இருந்தபோதிலும், டி.ஆர்.எஸ் மேயர் பதவிக்கு உரிமை கோரக்கூடிய 65 இடங்களை…

மேலும்...

மக்கள் மனதிலிருந்து பெயரை மாற்ற முடியாது – யோகிக்கு உவைசி பதிலடி!

ஐதராபாத் (30 நவ 2020): ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என மாற்றப்படும் என்று உ..பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். ஐதராபாத் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, “ஐதராபாத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், ஐதராபாத்தின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்படும்.”என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் AIMIM தலைவர் உவைசி கூறுகையில், “ஐதராபாத்தின் பெயரை மாற்றினாலும் மக்கள் மனதிலிருந்து ஐதராபாத் என்ற பெயரை…

மேலும்...

அஸாதுத்தீன் உவைசிக்கு முஸ்லீம் லீக் ஆதரவு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகராட்சி தேர்தலில் ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐ ஆதரிப்பதாக முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் AIMIM வேட்பாளர்களை ஆதரிப்பதாக தெலுங்கானா முஸ்லீம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக இங்கு கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்….

மேலும்...

ஐதராபாத் பெயர் மாற்றம் – யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர் மாற்றுவதில் என்ன தவறு உள்ளது? என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பாக அவர் பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: “ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர்…

மேலும்...