தமிழகத்தில் கனமழைக்கு 14 பேர் பலி!

இச்செய்தியைப் பகிருங்கள்:

சென்னை (11 நவ 2021): தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் பெய்த மழை காரணமாக தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,45,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 187 கால்நடைகள் இறந்துள்ளன. 237 வீடுகள், 1,146 குடிசை வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு மற்றும் சேதத்திற்கு நிவாரணம் வழங்கப்படும். மழை பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் நாளை துவங்கும். மழையின் அளவை பொறுத்து ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறினார்.

இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேத பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply