ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு தடை!

Share this News:

அஹமதாபாத் (13 பிப் 2022): குஜராத்தில் ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்

மேலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்துள்ளனர். . கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக சூரத்தில் முஸ்லிம் அமைப்புகள் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

AIMIM இன் சூரத் பிரிவு தலைவர் வாசிம் குரேஷி மற்றும் கட்சி உறுப்பினர் நஸ்மா கான் உட்பட 20 பெண் எதிர்ப்பாளர்கள் பேரணியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. .

ஹிஜாப் விவகாரத்தில் அகமதாபாத்தில் AIMIM செயல்பாட்டாளர்களின் கையெழுத்து சேகரிப்பையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர். கையொப்பமிடுவதற்கு முன்பு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
அகமதாபாத் காவல்துறையினர் இதுவரை சுமார் 200 பேரை அந்நகரில் கைது செய்துள்ளனர்.

ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீதான வாதங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு திங்கள்கிழமை விசாரிக்கும்.


Share this News:

Leave a Reply