ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதை ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதை ரீ ட்விட் செய்து தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்த அமைச்சர்…

மேலும்...

பசு கடத்தல் வழக்கில் 22 வயது இளைஞர் முஹம்மது அமீனுக்கு ஆயுள் தண்டனை!

புதுடெல்லி (21 ஜன 2023): பசுக்களை கடத்திய வழக்கில் 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் விசித்திர தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானைச் சேர்ந்த முகமது அமீன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டில், தெப்சி மாவட்டத்தின் நிஜார் காவல் நிலைய எல்லைக்குள் ஒரு டிரக்கில் 16 மாடுகளைக் கொண்டு சென்றபோது, மாடுகளை கடத்தியதாக அமீன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு குஜராத் வியாராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை…

மேலும்...

முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

அஹமதாபாத் (17 டிச 2022): குஜராத்தில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் நூர் முகமது வோரா தனது 22 வயது மனைவிக்கு உடனடி தலாக் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் சலீம் மீது முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ்…

மேலும்...

குஜராத் புதிய எம்.எல்.ஏக்களில் 40 பேர் குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்கள்!

அஹமதாபாத் (11 டிச 2022): 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது. இதில் 29 உறுப்பினர்கள் கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு போன்ற கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். இதில் 20 பேர் பாஜக எம்எல்ஏக்கள், 4 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். ஆம் ஆத்மி கட்சி(2),…

மேலும்...

குஜராத்தில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி!

அஹமதாபாத் (10 டிச 2022): நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்டன. இத்தேர்தலில் 156 தொகுதிகளில் வெற்றிபெற்று குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்நிலையில், குஜராத்தில்…

மேலும்...

குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றியை அள்ளிய பாஜக!

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள 19 சட்டமன்றத் தொகுதிகளில் 17 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஒரு முஸ்லீம் வேட்பாளரை கூட பாஜக நிறுத்தவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும் இது நடந்துள்ளது. இதற்கிடையில், மீதமுள்ள 19 இடங்களில் ஜமால்பூர்-காடியா மற்றும் வத்காம் ஆகிய 2 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதேவேளை பாஜக வெற்றிபெற்ற பல தொகுதிகளில், பல முஸ்லிம் வேட்பாளர்கள் பாஜக…

மேலும்...

தேசிய கட்சியாக அங்கீகாரம் கிடைப்பது எப்படி?

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கு வரும் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், கருத்துக் கணிப்புகளின்படி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 9 முதல் 21 இடங்கள் கிடைக்கும். குஜராத்தில் குறைந்தது இரண்டு இடங்களையாவது பெற்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கும். தேசிய கட்சி அந்தஸ்து பெறுவதற்கு சில…

மேலும்...

பாஜகவுக்கு பலத்த அடி – குஜராத்தில் மட்டுமே கொண்டாட்டம்!

புதுடெல்லி (08 டிச 2022): குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல், 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில்…

மேலும்...

135 பேர் பலியான தொங்கு பால விபத்து – பாஜகவின் வெற்றியை பாதிக்கவில்லை!

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் 135 பேர் பலியான தொங்கு பால விபத்து நடந்த மோர்பியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில்…

மேலும்...